பற்றிமா வீதி, மாதகலைப் பிறப்பிடமாகக் கொண்ட மேரி லூர்துமலர் சௌந்தரநாயகம் 26-04-2026 ஞாயிற்றுக்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்ற சௌந்தரநாயகத்தின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான சந்தியாகு, பிலோமினம்மாவின் பாசமிகு மகளும் , அன்று செல்வநாயகம் (கனடா) , காலஞ்சென்றவர்களான ஜேற்றூட் ராணி , பேர்ணடேட் மணி ஆகியோரின் அன்பு சகோதரியும், ஜிக்கி (பிரான்ஸ்), காலஞ்சென்ற ராஜா , காலஞ்சென்ற நிம்மி, மற்றும் கௌறி (அவுஸ்திரேலியா) , வின்சி (நோர்வே) , குமார் (பிரான்ஸ்) , ஜோகா (பிரான்ஸ்) , கீத்தா (அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தாயாரும் , ரெலஸ்போர் , மேனா , கென்றி , அலோசியஸ் , உஷா, சுமதி , நிரஞ்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும் , ஹரல்ட் , ஹென்றியேற்றா , கரிஷ் , ஹென்றீனா , சில்வியா, சஞ்ஜே , அஷ்வின், அர்ச்சனா, அரிஸ்ரன் , ஆர்த்தி , ஜோசவ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும், அஜே , ஜோர்டன் , ஹெலேனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இறுதிச் சடங்குகள் 29.04.2026 புதன்கிழமை மாலை 6 மணிக்கு மாதகல் பிரதான வீதி 465 இலக்க இல்லத்தில் ( முத்து கடையடி) மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மறுநாள் வியாழக்கிழமை 30.04.2026 காலை 9 மணிக்கு வீட்டில் வழிபாடுகள் ஆரம்பமாகி 9.30 மணிக்கு மாதகல் புனித தோமையார் ஆலயத்தில் நடைபெறும் திருப்பலி வழிபாடுகளைத் தொடர்ந்து புனித தோமையார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
உற்றார் , உறவினர், நண்பர்கள் இவ்வறிவித்தலை ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
Family page in Brulinfamily
to view family page you need to login to brulinfamily with your username and password
To post condolences, comments, messages or tributes...
if you are a member , please login to brulinfamily or JoinBrulinfamily
Login or JoinBrulinfamily